Saturday, 19 July 2008

கிராமத்து பள்ளிக்கூடம் ..

கிராமத்து பள்ளிக்கூடம் ..
இது எங்க கிராமத்து பள்ளிக்கூடம் ! ரெண்டு பித்தான் இல்லாத வெள்ள சட்ட அம்மா பின்னுகுத்தி போட்டு விட்டா!
அண்ணாவோட காக்கி டிராயர் ..அரணாகயிறே பெல்ட்டா ஆச்சு !
எட்டு ரூபா கணக்குநோட்டுக்கு ரூபா பத்தலைன்னு அப்பா கிட்ட
ஒரு சின்ன சண்டை !
எண்ண போட்டு தல சீவி தோள் பைய தூக்கிகிட்டு நிழலே
கால் செருப்பாக தடம் பூரா கல்லு குத்த ,
ஆத்தோர அரசமர புள்ளையார கும்பிட்டு ...நெத்தி நெறைய விபூதி பூசி
தென்னந் தோப்ப தாண்டி நடந்தா...எங்க பள்ளிக்கூடம் ஒசந்து நிக்கும்
கூர கொட்டா , மண்ணு சொவுரு...கதவில்லா அரண்மனை அது
சத்துணவு , முட்ட எல்லாம் சண்ட போட்டு சாப்பிடுவோம்..
சத்தம் போடுற பெரிய டீச்சர பாத்தா மட்டு பயந்து நிப்போம் !
எங்க பள்ளிகூட செவுத்துல சுண்ணாம்பிருந்து நாங்கபாத்ததில்ல ....
மழைவந்து நின்னா மட்டும் வகுப்புல மறக்காம கப்பல் விடுவோம் !
நாலு மணி பெல்லு அடிச்சா நாலு பக்கமும் செதறி ஓடுவோம் !
பக்கத்துக்கு தோப்பு பம்புசெட்ல யாரும் பாக்குற ஆட்டம் போடுவோம் ! முட்டு சொவுரு ஏறி குதிச்சு குறி பாத்து கல்லெறிஞ்சி பெரிய வூட்டு புளியங்கா ருசிச்சிகிட்டே வூட்டு பாடம் எழுதி முடிச்சோம்.
எப்படியோ படிச்சு வாழ்க்கையில தான் ஒசந்து புட்டோம்...
எங்களயெல்லாம் ஒசத்திவிட்ட எங்க ஊரு பள்ளிக்கூடம் தான் மட்டும் ஒசரலியே !கூர கூட மாறலியே !

3 comments:

Sumathi. said...

ஹாய் வசந்த்,

//எங்க ஊரு பள்ளிக்கூடம் தான் மட்டும் ஒசரலியே !கூர கூட மாறலியே ! //

என்ன உனக்கும் ஆட்டோகிராப்பா?
ம்ம்... நல்ல இருக்குப்பா இதுவும்.

Thamiz Priyan said...

நல்லா இருக்குங்க..:)

SENTHIL EG IYAPPAN said...

ஹாய்,
அட பரவாயில்லையே, நீ கூட நல்லாத் தான் எழுதறே, ம்ம்ம் தொடரட்டும் இனியும்.