Tuesday, 9 December 2008

நட்பு

மனசும் மனசும் பேசி கொண்டல் வார்த்தை கிடையாது
முகம் பார்க்காமல் பேசும் நட்புக்கு பிரிவு கிடையாது

உறவை நேசிப்பதை விட உள்ளத்தை நேசித்து பார்
நீ நேசிக்கும் உள்ளம் கோபம் கொண்டாலும் சுகமாக தோணும்

உயிருக்கு உயிராய் இருந்து உயிரை வாங்கும் காதலை விட
உயிருக்கு உயிராய் இருந்து உயிர் கொடுக்கும் நட்பு மேலானது

நீ இல்லை என்றால் நான் இல்ல என்பது காதல்....
யார் இல்லை என்றாலும் நான் இருப்பேன் என்பது நட்பு...

நான் உன் உயிர் தோழனாக இல்லாமல் இருக்கலாம்
ஆனால்என் உயிர் உள்ளவரை நல்ல தோழனாக இருப்பேன்....வசந்தகுமார் வாங்கபழகலாம்

Saturday, 6 December 2008

எதார்த்தத்தின் நிழலில்

இன்றும் நான் பேருந்தில் தான் பயணம் செய்து கொண்டிருக்கிறேன் நீ இறங்கிய நிறுத்தத்திலிருந்து.......
உன்னுடைய விமானப் பயணம் எப்படி இருந்த தென்று நண்பர்கள் பலர் விசாரித்திருப்பார்கள் என்னைத் தவிர....... .
என்னுடைய விசாரிப்பை நீ எதிர்ப்பார்த்திருக்க மாட்டாய் என்பதை நானறிவேன் நம்முடைய வாழ்க்கை தான் எவ்வளவு சீக்கிரத்தில் எதார்த்தத்தின் நிழலில் சரணடைந்து விட்டது.........
என்னுடைய டைரியில் உனது பெயர் இடம்பெறுவது அரிதாகிவிட்டது உனது நினைவை எப்பொழுதாவது ஒரு முறைத் தூண்டும் கனவு கூட இப்பொழுதெல்லாம் வருவதில்லை நான் உறங்குவதே இல்லையென்பதால்....
எவ்வளவு மகிழ்ச்சி தெரியுமா! உன்னை மறந்ததில் எனக்கு...
பெருமிதமாக்த் தான் இருந்தேன் உன் குரலை அலைப் பேசியில் கேட்கும் வரை......
எப்படி இருக்கிறாய்? என உன் குரல் ஒலிக்கையில்.....
நலமென்று சொல்ல மட்டும் பொய்யெனக்கு வரவில்லை ஆனால் நீ மட்டும் சொன்னாய்

நட்பு

மனசும் மனசும் பேசி கொண்டல் வார்த்தை கிடையாது
முகம் பார்க்காமல் பேசும் நட்புக்கு பிரிவு கிடையாது

உறவை நேசிப்பதை விட உள்ளத்தை நேசித்து பார்
நீ நேசிக்கும் உள்ளம் கோபம் கொண்டாலும் சுகமாக தோணும்

உயிருக்கு உயிராய் இருந்து உயிரை வாங்கும் காதலை விட
உயிருக்கு உயிராய் இருந்து உயிர் கொடுக்கும் நட்பு மேலானது

நீ இல்லை என்றால் நான் இல்ல என்பது காதல்....
யார் இல்லை என்றாலும் நான் இருப்பேன் என்பது நட்பு...

நான் உன் உயிர் தோழனாக இல்லாமல் இருக்கலாம்
ஆனால்என் உயிர் உள்ளவரை நல்ல தோழனாக இருப்பேன்....வசந்தகுமார் வாங்கபழகலாம்

Saturday, 19 July 2008

கிராமத்து பள்ளிக்கூடம் ..

கிராமத்து பள்ளிக்கூடம் ..
இது எங்க கிராமத்து பள்ளிக்கூடம் ! ரெண்டு பித்தான் இல்லாத வெள்ள சட்ட அம்மா பின்னுகுத்தி போட்டு விட்டா!
அண்ணாவோட காக்கி டிராயர் ..அரணாகயிறே பெல்ட்டா ஆச்சு !
எட்டு ரூபா கணக்குநோட்டுக்கு ரூபா பத்தலைன்னு அப்பா கிட்ட
ஒரு சின்ன சண்டை !
எண்ண போட்டு தல சீவி தோள் பைய தூக்கிகிட்டு நிழலே
கால் செருப்பாக தடம் பூரா கல்லு குத்த ,
ஆத்தோர அரசமர புள்ளையார கும்பிட்டு ...நெத்தி நெறைய விபூதி பூசி
தென்னந் தோப்ப தாண்டி நடந்தா...எங்க பள்ளிக்கூடம் ஒசந்து நிக்கும்
கூர கொட்டா , மண்ணு சொவுரு...கதவில்லா அரண்மனை அது
சத்துணவு , முட்ட எல்லாம் சண்ட போட்டு சாப்பிடுவோம்..
சத்தம் போடுற பெரிய டீச்சர பாத்தா மட்டு பயந்து நிப்போம் !
எங்க பள்ளிகூட செவுத்துல சுண்ணாம்பிருந்து நாங்கபாத்ததில்ல ....
மழைவந்து நின்னா மட்டும் வகுப்புல மறக்காம கப்பல் விடுவோம் !
நாலு மணி பெல்லு அடிச்சா நாலு பக்கமும் செதறி ஓடுவோம் !
பக்கத்துக்கு தோப்பு பம்புசெட்ல யாரும் பாக்குற ஆட்டம் போடுவோம் ! முட்டு சொவுரு ஏறி குதிச்சு குறி பாத்து கல்லெறிஞ்சி பெரிய வூட்டு புளியங்கா ருசிச்சிகிட்டே வூட்டு பாடம் எழுதி முடிச்சோம்.
எப்படியோ படிச்சு வாழ்க்கையில தான் ஒசந்து புட்டோம்...
எங்களயெல்லாம் ஒசத்திவிட்ட எங்க ஊரு பள்ளிக்கூடம் தான் மட்டும் ஒசரலியே !கூர கூட மாறலியே !

அம்மா! அம்மா! அம்மா!

ரத்தத்தில் நனைந்து வந்த என்னை முத்தத்தால் நனைத்த உன் இதழ்களில் முதல் முறை என் பெயரை எப்பொழுது உச்சரித்தாயோ அன்றிலிருந்து இன்று வரை அந்தக் குரலில் கலந்து வரும் உரிமையை உணர்வை வேறு எந்த குரலிலும் நான் உணர்ந்ததில்லை.

உன் விரல் பட்ட உணவில் தான் நான் உயிர் வளர்த்தேன் உன் இதழ் சிந்திய வார்த்தையை உச்சரித்துத் தான் மொழி பழகினேன் உன் சுவாசத்தில் கலந்த காற்றை சுவாசித்துத் தான் வாழ்ந்திருக்கேன்.

முதல் நடந்திடும் நான் விழுந்தது உன் மடியில் முதல் மொழியினை நான் உணர்ந்தது உன் இதழில் முதல் கலங்கிடும் விழிகளை துடைத்தது உன் உடையில் முதல் சிரிப்பினை பழகியது உன் முகத்தில் கண்ணாடிப் பார்க்கும் வரை என் அத்தனை முகங்களும் நீயே...

உன் முன்னாடி இருப்பதை விட வேறு இன்பமில்லை தாயே என் நிர்வானத்தை முதலில் களைத்த நீயே நீல வானத்தையும் காட்டி வளர்த்தாய்.

மூச்சு விடும் இடைவெளியிலும் உன் அன்பு எனை விட்டு விலகியதில்லை நீ காட்டி வளர்த்த ஒவ்வொரு பொருளும் இனி வேறெங்கும் காண்பதற்கில்லை கையெடுத்து நீ கும்பிடச் சொன்ன தெய்வமோ எனக்குத் தலை சீவிவிட்டதில்லை நானும் பொய்யுரைத்தப் பொழுதும் கூட நீ எனை அடித்ததில்லையே

குளிப்பாட்டி விடும் உன் கைகளில் அடி வாங்கஅடம் பிடிப்பேன் உன்னிடம் அடி வாங்காமல் உன்னன்பின் ஆழம் புரிவதில்லை என்பேன் கிறுக்கித் தான் அம்மா உன் கைகளை பிடித்து எழுதத் துவங்கினேன்.

அன்பை சுருக்கி வாழும் இதயங்களின் நடுவே உறவுகளைப் பெருக்கி வாழும் உன்னுடைய நேசத்தில் நெகிழ்ந்தேன் அணுஅணுவாய் என் வளர்ச்சியை ரசிப்பாய் ஒரு கைப்பிடி சோறு குறைந்தாலும் உள்ளம் துடிப்பாய் .

என்றைக்கும் உன் சேலை நுனி தான் என்னுடைய கை குட்டை உன் முகமே நான் முகம் பார்த்து தலை சீவும் கண்ணாடி உன் வாயில் புத்திசாலி என்று கேட்பதை விட முட்டாள் என்று செல்லமாக கேட்பதையே நான் விரும்புகிறேன் .

சட்டைப் பையில் கை விடும் பொழுதெல்லாம் எனக்குத் தெரியாமல் நீ வைத்த ஒரு ரூபா தலை நீட்டும் அந்த சுகம் இன்று எந்த ஆயிரம் லட்சங்களிலும் கிடைப்பதில்லை உன் விரல் நுனியின் சுவையை எந்த நட்சத்திர ஹோட்டலிலும் உணர்ந்ததில்லை உன் மடியின் சுகத்தை எந்த பஞ்சு மெத்தையும் தந்ததில்லை .........

அம்மா! சத்தியமாய் உன்னைப் போல் ஒரு பிரிவை இனி வேறு ஒருவரும் தரப் போவதில்லை .

காதல் தோல்வி

எனக்கென்று செய்யப்பட்ட சவப்பெட்டியே
உன்னிலொரு ஜன்னலை வைத்துக்கொள்..
என் சவ ஊர்வலத்திற்காவது
அந்தச் சண்டாளி வருகிறாளா
என பார்க்கவேண்டும்.

காதல் போர்..

ஒவ்வொரு முறையும் தோற்று விடுகிறேன்....
உன் கண்கள் எனும் ஆயுதத்தால் நீ தாக்கும்போது.
எனது போர் தந்திரங்கள் அனைத்தையும்
வெகு சுலபமாய் கையாள்கிறாய்..
மௌனம் எனும் கேடயம் கொண்டு...
உனக்கும் எனக்குமான போரில் எப்போதும்
எனக்கு தோல்விதான்.
திரும்ப திரும்ப உன்னுடன் போரிட்டு கொண்டிருக்கிறேன்...
உனது வெற்றிக்காக...

இது கவிதையல்ல.. களிம்பு

காதல் கடலில்முத்தெடுக்க மூழ்கி மூர்ச்சையானவனே!
காதல் காயத்திற்கு கண்ணீரால் க‌ட்டுபோட முய‌ற்சிப்ப‌வ‌னே!
உன‌க்கு தெரியாதா?க‌ட‌லின் உவர்ப்பை க‌ண்ணீரின் உவர்ப்பால்
க‌ழுவ‌முடியாது என்று.
ஏழு வ‌ய‌தில் ப‌ல் விழுந்த‌போது ப‌த‌றினாயா?ஏன் இப்பொழுது மட்டும்
காத‌ல் விழுந்த‌த‌ற்கு க‌த‌றுகிறாய்.
இர‌ண்டுமே அந்த‌ந்த‌ வய‌துக‌ளில் வ‌ருவ‌துதானே!
இதற்குமுன் அடி வாங்காமல் நடை பழகிய அனுபவம் உண்டா?
அடி வாங்காம‌ல் அட்ச‌ர‌ம் ப‌ழ‌கிய‌அனுபவம் உண்டா?
அடி ப‌டாம‌ல் மிதிவ‌ண்டி ப‌ழ‌கிய‌அனுபவம் உண்டா?
காதலில் ம‌ட்டும் எப்ப‌டி எதிர்ப்பார்க்கிறாய்?
முத‌ல் முய‌ற்சியிலே முழுமைய‌டைய‌.
அழிப்பான் இல்லாமல் வரைய‌ காதல் ஒன்றும் கார்ட்டூன் இல்லையே!
அது தஞ்சாவூர் ஓவியம் அன்றோ.
உன‌க்குதெரியுமா?...
பார‌தியின் க‌விதையையும் ம‌றுத‌லித்திருக்கிற‌து சுதேச‌மித்ர‌ன்.
எம்.ஜி.ஆரையிம்க‌தாநாய‌க‌னாக‌ ஏற்றுக்கொள்ள‌ ம‌றுத்திருக்கிற‌து த‌மிழ்சினிமா.
நண்பா! தெரிந்துகொள்..காத‌ல் தோல்விக்கு க‌ண்ணீர்தான் ம‌ருந்து என்றால் க‌ட‌ல்வாழ் உயிரின‌ங்க‌ள் ந‌ம்மை இப்படிதான் அழைக்கும்"இவ‌ர்க‌ள் க‌ண்ணீர்வாழ் உயிரிக‌ள்"என்று.

கா....த....ல்..

இரவும் கூட பகலாகும்..பகல் முழுதும் கனவாகும்...

அவள் நினைவுகளே உணவாகும்..

பூக்கள் பறித்த காலம் போய்..சருகுகள் மிதிக்க கூட கால்கள் தயங்கும்

மொழிகள் யாவும் மௌனமாக மௌனம் ஒன்றே மொழியாகும்...

இதயம் அருகில் அலைபேசி இருக்கும்..இடக்கை அதனை அடிக்கடி தேடும்..

சுற்றமும் நட்பும் பாரமாய் தோன்ற..தனிமை ஒன்றே சுகமாய் தோன்றும்..

பூக்கும் பூ... சிரிக்கும் குழந்தை... மாலை மழை..இரவு நிலா..

காலம் காலமாய் இருப்பதுதான்..

உனக்கு மட்டும் புதிதாய் தெரியும்..

இரவு விழித்தல்..உணவு மறுத்தல்..உலகம் மறத்தல்..

கா....த....ல்..

தீதும் நன்றும் பிறர்தர வாரா

நமக்கு வருகின்ற தீமையும் நன்மையும் பிறரால் வருவதில்லை.
நாம் செய்வதுதான் நம்மை வந்து சேரும்,அது நன்மையோ தீமையோ
எதுவானாலும்.!
ஆதலினால் நன்மை செய்வோம், நன்மை பெருவோம்.!
A genius said, a world is a mirror, it looks like what you are...!எதை நீ பிறரிடம் எதிர்பார்கிறாயோ அதை நீ அவர்களுக்கு கொடு.! -
will also place the same.!Whatever think good, be good.!

வாழ்த்துக்கள்..!

புன்னகை

வான்உயர கட்டிடத்தின் பதினான்காவது மாடியில்...இயந்திரத்தை இயக்கும் இயந்திரமாய் உருண்டோடியது என் எட்டுமணி நேரம் ...லட்சங்களை சேர்க்கும் கனவிற்காக வாழ்வின் சில ...அடிப்படை லட்சியங்களை அடகுவைத்தோமோ என நினைத்தபடி ..போலிப் புன்னகையுடன் போலந்து நாட்டவரிடம் இருந்து விடைபெற்று....தொடர்ந்தது என் பயணம் ...யாரென்றுகூட தெரியாமல் ...யதார்த்தமாய் புன்னகைத்து நலன் கேட்கும் நபர்களை பார்த்து கற்றுக்கொண்டேன் ..அன்பு மட்டுமேஅகிலத்தின் பொதுமொழி என்று ! சாரல் மழையில் ... சரியான நேரத்தில் வராத பேருந்தின் ..சன்னலில் தலை சாய்த்தபடி ..பாடல்களை கேட்டுபயணம் செய்தாலும் ... "வாரம் ஒரு முறையாவது ..மறக்காமல் கூப்பிடுடா "என்ற அம்மாவின் குரல்மட்டுமே ..தொடர்ந்து ஒலித்தது ! "வாழ்வில் நான் எதையோ இழப்பது ...வன்மையான உண்மை தான்"என்று பலமுறை சொல்லிக்கொண்டேன் .. எனக்குள் நானே ! போகும் வழியில்தலை ஆட்டும் மரங்கள் கூட ... பொதுவாக என் கருத்தை ஒப்புக்கொள்கின்றன !**************இப்படி என் அனைத்து இன்னல்களையும் ,,,தற்காலிகமாக தள்ளிவைத்தேன்.....ஒரு நிறுத்தத்தில் !இளஞ்சிவப்பு நிறகுடையையும் சேர்த்துஇரண்டரைஅடி உயரம்கூடதாண்டாத அந்த .. அழகிய குட்டி தேவதையின் .. அப்பாவி புன்னகையால் ! ******* என் இதயம் புன்னகைத்தது !

எதார்த்தத்தின் நிழலில்

இன்றும் நான் பேருந்தில் தான் பயணம் செய்து கொண்டிருக்கிறேன் நீ இறங்கிய நிறுத்தத்திலிருந்து....... உன்னுடைய விமானப் பயணம் எப்படி இருந்த தென்று நண்பர்கள் பலர் விசாரித்திருப்பார்கள் என்னைத் தவிர....... .என்னுடைய விசாரிப்பை நீ எதிர்ப்பார்த்திருக்க மாட்டாய் என்பதை நானறிவேன் நம்முடைய வாழ்க்கை தான் எவ்வளவு சீக்கிரத்தில் எதார்த்தத்தின் நிழலில் சரணடைந்து விட்டது......... என்னுடைய டைரியில் உனது பெயர் இடம்பெறுவது அரிதாகிவிட்டது உனது நினைவை எப்பொழுதாவது ஒரு முறைத் தூண்டும் கனவு கூட இப்பொழுதெல்லாம் வருவதில்லை நான் உறங்குவதே இல்லையென்பதால்.... எவ்வளவு மகிழ்ச்சி தெரியுமா! உன்னை மறந்ததில் எனக்கு... பெருமிதமாக்த் தான் இருந்தேன் உன் குரலை அலைப் பேசியில் கேட்கும் வரை...... எப்படி இருக்கிறாய்? என உன் குரல் ஒலிக்கையில்..... நலமென்று சொல்ல மட்டும் பொய்யெனக்கு வரவில்லை ஆனால் நீ மட்டும் சொன்னாய்

காதலை விட்டு கொடுத்தேன்.. என் காதலிக்காக....

கடவுளை விட புனிதமாய் நினைத்திருந்தேன் என் காதலை ....அவள் தான் என் வாழ்க்கை என்று பலரிடம் சொல்லி இருப்பேன்....எனக்கென்று ஒரு திசை இல்லாமல்....அவள் பயணித்த்த திசையில் நானும்....என்றாவது புரிந்து கொள்வாள் என்று....
என் வாழ்க்கை செல்லும் பாதை புரியாமல்...முடிவாய் சொல்லிவிட்டாள்..இனி என்னை தொடராதே என்று...பாவம்..என்றோ அவளுக்குள் உறைந்து விட்டதை உணராமல்...
காதலுக்காக வாழ்க்கையை இழந்தேன்...இன்று அவளுக்காக என் உயிர் காதலையும்...

சுகம்.

ஜன்னலோரபயனத்தில் ...
காற்றின் வேகத்தால்
தானாய் மூடிய கண்கள்;
என்னையே மறந்து ...
ஏதோ ஒரு பாடலை
கேட்டு ரசிப்பதைப்போல்
ஒரு சுகம்
என்னவள்
என்னை கடந்து செல்லும்போதெல்லாம் !

Saturday, 12 July 2008

தினம் ஒரு தமிழ் வார்த்தை......

தினம் ஒரு தமிழ் வார்த்தை கற்போம் என்ற இந்த தனியினத்தின் மூலம் தங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இந்த என் முயற்சி நம் தமிழ் காக்க உதவும் என்று நம்புகிறேன்.இந்த தனியினம், இப்போது நடைமுறையில் இல்லாத, அழிந்து போன தமிழ் வார்த்தைகளுக்கு உயிர் கொடுத்து மீண்டும் உங்கள் முன் சமர்பிக்கிறது.இந்த தனியினத்தில் நீங்களும் உங்களுக்கு தெரிந்த சங்க கால தமிழ் வார்த்தைகளை தமிழ் மக்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.மேலும், தங்களுக்கு தெரியாத தமிழ் வார்த்தைகளுக்கு அர்த்தங்களை உங்கள் கேள்வியாக இங்கே பதிவு செய்யலாம். உங்கள் கேள்விகளுக்கு தமிழ் மக்கள் மூலமாக பதில்கள் வழங்கப்படும்.இந்த தனியினத்தை தமிழ் வார்த்தைகளைக் கற்றுக்கொள்வதற்கு மட்டும் பயன்படுத்தும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்

வசந்தகுமார்

முதல் காதல்.

ஹாய் என் பேரு வசந்த குமார்.நான் ரசிச்ச சில அழகான
வரிகள் கீழே. நீங்களும் ரசிப்பீங்க னு நினைக்கிறேன்.

When you are in "LOVE"
Never regret to 'What you do'
Only regret to'What you did not do'.
Love the heart even that hurts YOU

But never hurt the heartthat loves YOU

Love is like a Music - Play It
But don't play with it


My eyes miss You
My feels loves You
My hands need You
My mind calls You
My Heart is just for You
My life is with You
I will die without You
That's what I always say


I LOVE YOU.