Saturday, 19 July 2008

இது கவிதையல்ல.. களிம்பு

காதல் கடலில்முத்தெடுக்க மூழ்கி மூர்ச்சையானவனே!
காதல் காயத்திற்கு கண்ணீரால் க‌ட்டுபோட முய‌ற்சிப்ப‌வ‌னே!
உன‌க்கு தெரியாதா?க‌ட‌லின் உவர்ப்பை க‌ண்ணீரின் உவர்ப்பால்
க‌ழுவ‌முடியாது என்று.
ஏழு வ‌ய‌தில் ப‌ல் விழுந்த‌போது ப‌த‌றினாயா?ஏன் இப்பொழுது மட்டும்
காத‌ல் விழுந்த‌த‌ற்கு க‌த‌றுகிறாய்.
இர‌ண்டுமே அந்த‌ந்த‌ வய‌துக‌ளில் வ‌ருவ‌துதானே!
இதற்குமுன் அடி வாங்காமல் நடை பழகிய அனுபவம் உண்டா?
அடி வாங்காம‌ல் அட்ச‌ர‌ம் ப‌ழ‌கிய‌அனுபவம் உண்டா?
அடி ப‌டாம‌ல் மிதிவ‌ண்டி ப‌ழ‌கிய‌அனுபவம் உண்டா?
காதலில் ம‌ட்டும் எப்ப‌டி எதிர்ப்பார்க்கிறாய்?
முத‌ல் முய‌ற்சியிலே முழுமைய‌டைய‌.
அழிப்பான் இல்லாமல் வரைய‌ காதல் ஒன்றும் கார்ட்டூன் இல்லையே!
அது தஞ்சாவூர் ஓவியம் அன்றோ.
உன‌க்குதெரியுமா?...
பார‌தியின் க‌விதையையும் ம‌றுத‌லித்திருக்கிற‌து சுதேச‌மித்ர‌ன்.
எம்.ஜி.ஆரையிம்க‌தாநாய‌க‌னாக‌ ஏற்றுக்கொள்ள‌ ம‌றுத்திருக்கிற‌து த‌மிழ்சினிமா.
நண்பா! தெரிந்துகொள்..காத‌ல் தோல்விக்கு க‌ண்ணீர்தான் ம‌ருந்து என்றால் க‌ட‌ல்வாழ் உயிரின‌ங்க‌ள் ந‌ம்மை இப்படிதான் அழைக்கும்"இவ‌ர்க‌ள் க‌ண்ணீர்வாழ் உயிரிக‌ள்"என்று.

No comments: