தினம் ஒரு தமிழ் வார்த்தை கற்போம் என்ற இந்த தனியினத்தின் மூலம் தங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இந்த என் முயற்சி நம் தமிழ் காக்க உதவும் என்று நம்புகிறேன்.இந்த தனியினம், இப்போது நடைமுறையில் இல்லாத, அழிந்து போன தமிழ் வார்த்தைகளுக்கு உயிர் கொடுத்து மீண்டும் உங்கள் முன் சமர்பிக்கிறது.இந்த தனியினத்தில் நீங்களும் உங்களுக்கு தெரிந்த சங்க கால தமிழ் வார்த்தைகளை தமிழ் மக்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.மேலும், தங்களுக்கு தெரியாத தமிழ் வார்த்தைகளுக்கு அர்த்தங்களை உங்கள் கேள்வியாக இங்கே பதிவு செய்யலாம். உங்கள் கேள்விகளுக்கு தமிழ் மக்கள் மூலமாக பதில்கள் வழங்கப்படும்.இந்த தனியினத்தை தமிழ் வார்த்தைகளைக் கற்றுக்கொள்வதற்கு மட்டும் பயன்படுத்தும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
வசந்தகுமார்

1 comment:
ஹாய் வசந்த்,
//இந்த என் முயற்சி நம் தமிழ் காக்க உதவும் என்று நம்புகிறேன்.இந்த தனியினம், இப்போது நடைமுறையில் இல்லாத, அழிந்து போன தமிழ் வார்த்தைகளுக்கு உயிர் கொடுத்து மீண்டும் உங்கள் முன்..//
ஆஹா கிளம்பிட்டாங்கைய்யா...
சரி சரி ஆரம்பிங்க, பாக்க்லாம் எவ்ளோ நாள் ஓடுதுன்னு.
Post a Comment