Saturday, 19 July 2008

புன்னகை

வான்உயர கட்டிடத்தின் பதினான்காவது மாடியில்...இயந்திரத்தை இயக்கும் இயந்திரமாய் உருண்டோடியது என் எட்டுமணி நேரம் ...லட்சங்களை சேர்க்கும் கனவிற்காக வாழ்வின் சில ...அடிப்படை லட்சியங்களை அடகுவைத்தோமோ என நினைத்தபடி ..போலிப் புன்னகையுடன் போலந்து நாட்டவரிடம் இருந்து விடைபெற்று....தொடர்ந்தது என் பயணம் ...யாரென்றுகூட தெரியாமல் ...யதார்த்தமாய் புன்னகைத்து நலன் கேட்கும் நபர்களை பார்த்து கற்றுக்கொண்டேன் ..அன்பு மட்டுமேஅகிலத்தின் பொதுமொழி என்று ! சாரல் மழையில் ... சரியான நேரத்தில் வராத பேருந்தின் ..சன்னலில் தலை சாய்த்தபடி ..பாடல்களை கேட்டுபயணம் செய்தாலும் ... "வாரம் ஒரு முறையாவது ..மறக்காமல் கூப்பிடுடா "என்ற அம்மாவின் குரல்மட்டுமே ..தொடர்ந்து ஒலித்தது ! "வாழ்வில் நான் எதையோ இழப்பது ...வன்மையான உண்மை தான்"என்று பலமுறை சொல்லிக்கொண்டேன் .. எனக்குள் நானே ! போகும் வழியில்தலை ஆட்டும் மரங்கள் கூட ... பொதுவாக என் கருத்தை ஒப்புக்கொள்கின்றன !**************இப்படி என் அனைத்து இன்னல்களையும் ,,,தற்காலிகமாக தள்ளிவைத்தேன்.....ஒரு நிறுத்தத்தில் !இளஞ்சிவப்பு நிறகுடையையும் சேர்த்துஇரண்டரைஅடி உயரம்கூடதாண்டாத அந்த .. அழகிய குட்டி தேவதையின் .. அப்பாவி புன்னகையால் ! ******* என் இதயம் புன்னகைத்தது !

1 comment:

Sumathi. said...

ஹாய் வசந்த்,

//லட்சங்களை சேர்க்கும் கனவிற்காக வாழ்வின் சில ...அடிப்படை லட்சியங்களை அடகுவைத்தோமோ என ..//

//யதார்த்தமாய் புன்னகைத்து நலன் கேட்கும் நபர்களை பார்த்து கற்றுக்கொண்டேன் ..அன்பு மட்டுமேஅகிலத்தின் பொதுமொழி என்று !//

இது தான் இன்றைய நிஜம்.

//"வாரம் ஒரு முறையாவது ..மறக்காமல் கூப்பிடுடா "என்ற அம்மாவின் குரல்மட்டுமே ..//
தாயின் ஏக்கம்..

//"வாழ்வில் நான் எதையோ இழப்பது ...வன்மையான உண்மை தான்"என்று பலமுறை சொல்லிக்கொண்டேன் .. //

காலத்தின் கட்டாயம்.

//அழகிய குட்டி தேவதையின் .. அப்பாவி புன்னகையால் ! ******* என் இதயம் புன்னகைத்தது ! //

யாரந்த குட்டி தேவதை?

ரொம்ப நல்லாயிருக்கு.