இன்றும் நான் பேருந்தில் தான் பயணம் செய்து கொண்டிருக்கிறேன் நீ இறங்கிய நிறுத்தத்திலிருந்து.......
உன்னுடைய விமானப் பயணம் எப்படி இருந்த தென்று நண்பர்கள் பலர் விசாரித்திருப்பார்கள் என்னைத் தவிர....... .
என்னுடைய விசாரிப்பை நீ எதிர்ப்பார்த்திருக்க மாட்டாய் என்பதை நானறிவேன் நம்முடைய வாழ்க்கை தான் எவ்வளவு சீக்கிரத்தில் எதார்த்தத்தின் நிழலில் சரணடைந்து விட்டது.........
என்னுடைய டைரியில் உனது பெயர் இடம்பெறுவது அரிதாகிவிட்டது உனது நினைவை எப்பொழுதாவது ஒரு முறைத் தூண்டும் கனவு கூட இப்பொழுதெல்லாம் வருவதில்லை நான் உறங்குவதே இல்லையென்பதால்....
எவ்வளவு மகிழ்ச்சி தெரியுமா! உன்னை மறந்ததில் எனக்கு...
பெருமிதமாக்த் தான் இருந்தேன் உன் குரலை அலைப் பேசியில் கேட்கும் வரை......
எப்படி இருக்கிறாய்? என உன் குரல் ஒலிக்கையில்.....
நலமென்று சொல்ல மட்டும் பொய்யெனக்கு வரவில்லை ஆனால் நீ மட்டும் சொன்னாய்
Saturday, 6 December 2008
Subscribe to:
Post Comments (Atom)

8 comments:
னல்லா எழுதுறீங்க..
அன்புடன் அருணா
நல்லாருக்குங்க!
மிக்க நன்றி
//இன்றும் நான் பேருந்தில் தான் பயணம் செய்து கொண்டிருக்கிறேன் நீ இறங்கிய நிறுத்தத்திலிருந்து.......//
உன் நினைவுகளை சுமந்த படியே.....!
(இது நல்லா இருக்கா?!)
////இன்றும் நான் பேருந்தில் தான் பயணம் செய்து கொண்டிருக்கிறேன் நீ இறங்கிய நிறுத்தத்திலிருந்து.......//
தம்பி டிக்கெட் எடுப்பா முதல்ல
ஏற்கனவே கவர்ன்மெண்ட் வண்டியெல்லாம் கடன்ல முழ்கி நஷ்டத்தில ஓடுது இப்படி நாலு பேரு நாள் பூரா போய்க்கிட்டே இருந்தா :)))))
(இது கும்மி - கோச்சுக்கப்படாது !)
ஹாய்,
தம்பி ஆயில்யா, வசந்த்து இந்த(ப்ளாக்க சொன்னேன்) உலகத்துக்கு புதுசுப்பா,ஓரேயடியா, ஆரம்பிச்சுடாதப்பா
கொஞ்சம் கொஞ்சமா ஆரம்பிப்பா...
இது கதையோ, கவிதையோ, எண்ணமோ எதுவாக இருப்பினும், மனதை என்னவோ செய்தது.
உங்கள் எழுத்துக்கு வெற்றி.
இதே வார்த்தைகள் எனக்கு ஏற்ப்பட்ட ஒரு சூழ்நிலையில் பொருந்துகின்றன
மனதை எதுவோ கஷ்டபடுத்துகிறது
Post a Comment